தஞ்சாவூர், பிப்.11: தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியின்படி நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கவிதா வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் சோமசுந்தரம் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் விளக்க உரையாற்றினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமுல்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21மாத நிலுவைத்தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவை, நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள் PPP & CEO உள்ளிட்ட சிறப்பு காலமுறை, தொகுப்பூதிய மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும். முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் வரிவுபடுத்த வேண்டும். சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். யுனைடெட்இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டணமில்லா சிகிச்சையினை உறுதிப்படுத்த வேண்டும். மருத்துவத்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார் கம்பெனிகள் மற்றும் புற ஆதார முகமை மூலம் நியமனம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
காலமுறை ஊதிய நடைமுறையில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. அதுல இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ் நிறைவுறையாற்றினார் மாவட்ட பொருளாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
The post தஞ்சையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.