தஞ்சாவூர், பிப்.14: தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்களாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கவர்னர் 13.02.2025 நாளிட்ட ஒப்புதலின்படி, தமிழ்ப் பல்கலைக்கழகச் சட்டவிதி 1982, பிரிவு 12(4)இன்படியும், தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குப் புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை, பல்கலைக்கழக நிருவாகத்தை கவனித்து வர 5 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். வே. ராஜாராமன்: கூட்டுநர்அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை தலைமைச் செயலகம், சென்னை. முனைவர் சி. அமுதா: உறுப்பினர் இணைப் பேராசிரியர், தமிழ்த்துறை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி தஞ்சாவூர்.
முனைவர் வீ. அரசு: உறுப்பினர் முன்னாள் பேராசிரியர் மற்றும் தலைவர் (தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்) கல்மரம், எண் -4 வீராசாமி தெரு, குறிஞ்சி நகர், பெருங்குடி, சென்னை – 600 096 மருத்துவர் பெ. பாரதஜோதி: -உறுப்பினர் அறிவியல் புலத்தலைவர் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். முனைவர் ந. அருள்: உறுப்பினர் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை -8 எனவே, தமிழ்ப் பல்கலைக்கழக நிருவாகப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் புதிய துணைவேந்தர் நியமனம் செய்யப்படும் வரை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவினரால் ஒப்புதல் அளிக்கப் பெற்ற மேற்காணும் 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர்களாகச் செயல்படுவார்கள் என தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் 5 பேர் நியமனம் appeared first on Dinakaran.