
தஞ்சை,
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கர்நாடகாவில் இருந்து வந்த டெம்போ வேனும், அரசு பேருந்தும் மோதியதில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.