கும்பகோணம், மே 10: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்புகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெறும் என்றமுத லமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இப்பேரணியை அறிவித்த முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி. இப்பேரணிக்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை தெரிவிக்கிறது. மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக இந்த பேரணியில் பங்கேற்பார்கள். நாட்டின் ஒற்றுமையையும், வலிமையும் பறைசாற்ற அனைவரும் கரம் கோர்ப்போம் இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு ஆபரேசன் சிந்தூர் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு appeared first on Dinakaran.