தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டரில் நரம்பியல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம்

6 months ago 18

தஞ்சாவூர், டிச.8: தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டரில் நரம்பியல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. டெல்டா மாவட்ட மக்களின் நலன்கருதி தஞ்சாவூர  காமாட்சி மெடிக்கல் சென்டரில், நரம்பியல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் 2.12.2024 முதல் 7.12.2024 வரை நடைபெற்றது. இம்முகாமில் நரம்பியல் சிகிச்சை சார்ந்த சிறப்பு பரிசோதனைகள், ரத்த அணுக்களின் எண்ணிக்கை (CBC), ரத்தத்தில் சர்க்கரைஅளவு (RBS +HbA1c), யூரியா, சோடியம், பொட்டாசியம், மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.மனோஜ்சந்திரன் மற்றும் மூளை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர் ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோரின் மருத்துவ ஆலோசனை ஆகிய அனைத்தும் சிறப்பு கட்டணமான ரூ.499க்கு வழங்கப்பட்டது. மேலும் EEG, NCS மற்றும் இதர பரிசோதனைகள் தேவைப்படுவோருக்கு 20% சலுகை கட்டணத்தில் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு மருத்துவ முகாமில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

The post தஞ்சாவூர் காமாட்சி மெடிக்கல் சென்டரில் நரம்பியல் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article