தஞ்சாவூரில் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் குறித்து உறுதியேற்பு

1 month ago 4

 

தஞ்சாவூர், டிச. 12: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மனித உரிமைகள் தொடர்பான உறுதிமொழி ஏற்பு நடந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.

என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன். இவ்வாறு, கலெக்டர் தலைமையில் அனைவரும் உறுதி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா எஸ்.விஜயன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெய, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

The post தஞ்சாவூரில் கலெக்டர் தலைமையில் மனித உரிமைகள் குறித்து உறுதியேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article