தண்டையார்பேட்டை, ஜன.12: கோவையில் இருந்து வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் நேற்று மாலை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. அந்த ரயிலின் முன்பதிவு இல்லா பெட்டி அடியில் ஆணின் மணிக்கட்டிற்கு கீழ் வலது கை தொங்கிய நிலையில் இருந்தது. தகவலறிந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் இருந்து சென்னை வரும் வழியில், தண்டவாளத்தை கடக்க முயன்றவர் மீது ரயில் மோதி, அவரது கை மட்டும் ரயிலில் சிக்கி வந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது.
The post கோவையில் இருந்து சென்னை வந்த விரைவு ரயிலில் சிக்கி துண்டான ஆண் கை appeared first on Dinakaran.