தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 எகிறியது

1 day ago 4

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு பவுன் ரூ.74,320க்கு விற்பனையானது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி தங்கம் விலை மளமளவென சரிந்து ஒரு பவுன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. அதைத் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாரத்தின் தொடக்க நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது. அதாவது தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.8,950க்கும், பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.71,600க்கும் விற்பனையானது. இந்த விலை குறைவு நகை வாங்குவோருக்கு சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. நேற்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,995க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ஒரு பவுன் ரூ.71,960க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.111க்கு விற்பனையானது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக, அதாவது மே 23ம் தேதி முதல் நேற்று வரை வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.111க்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

The post தங்கம் விலை பவுனுக்கு ரூ.360 எகிறியது appeared first on Dinakaran.

Read Entire Article