
தங்கம் விலை இந்த மாதத்தில் கடந்த 5-ந்தேதி வரை உயர்ந்து, மறுநாளில் இருந்து 9-ந்தேதி வரை குறைந்திருந்தது. பின்னர் மீண்டும் அதிகரித்து, அதற்கு அடுத்த நாளே குறைந்தது. இப்படியாக ஏற்ற, இறக்கத்துடன் இருந்த தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து உயர்ந்து வந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்து காணப்பட்டது. ஒரே நாளில் நேற்று காலை மற்றும் பிற்பகல் என 2 முறை தங்கம் விலை ஏற்றம் கண்டது.
நேற்று ஒரே நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,300-க்கும், ஒரு சவரன் ரூ.66,400-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிப்பிடித்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து சற்று ஆறுதல் அளித்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.65,760-க்கும், தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.8,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.112-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.