"தக் லைப்" படத்தின் "விண்வெளி நாயகா" பாடல் வெளியீடு

1 month ago 6

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி நெறுங்கி வருவதால் படத்திற்கான புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாய் ராம் என்ஜினீயரிங் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.

'தக் லைப்' படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தின் 'ஜிங்குச்சா' பாடல் யூடியூபில் 4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் வரிகளில் ஆதித்யா, வைஷாலி சமந்த், சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர். இந்த படத்தின் 2வது பாடலான 'சுகர் பேபி' வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், 'தக் லைப்' படத்தில் இடம் பெற்றுள்ள 'விண்வெளி நாயகா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.ஏ.ஆர்.ரகுமான் இசையில் சுருதிஹாசன், ஏ.ஆர்.அமீன் பாடியுள்ள இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜிங்குச்சா, சுகர் பேபி, முத்த மழை, விண்வெளி நாயகா , அஞ்சு வண்ண பூவே, ஓ மாறா, எங்கேயோ, லெட்ஸ் பிளே ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article