தூத்துக்குடி: தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 1.14 கோடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மகளிர் பொருளாதாரம் மேம்பட ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் தந்து கொண்டிருக்கிறார்கள். திமுக இல்லாவிடில் தமிழர்களின் வீட்டு திருமணத்தை தமிழில நடத்துகிற உரிமை கூட இல்லாமல் பேரயிருக்கும். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது தி.மு.க ஆட்சி. சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியது தி.மு.க ஆட்சி என்றும் கூறினார்.
The post தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.