சென்னை,
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய், வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தம் கட்சி போட்டியிடும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதற்கு முன்னோட்டமாக, கட்சியின் மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடத்தப்படுகிறது. முதல் மாநாடு என்பதாலும், தமிழக மக்கள் மத்தியில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதாலும், மாநாட்டின் ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து வருகின்றன.
விஜய் கட்சி மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் காரணமாக வி.சாலை பகுதி மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வி.சாலை விஜய்யின் வியூகச் சாலையாக மாறி, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டும் என்ற எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் மாநாட்டிற்காக இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர்
கட்சியின் நோக்கங்கள், கொள்கை திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் மத்தியில் இன்று விஜய் உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கிய பின் அவரது முதல் உரை என்பதால், தமிழக அரசியல் கட்சியினர் அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். மாநாட்டில் பங்கேற்க வரும் தொண்டர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூஆர் கோட் மூலம் ஸ்கேன் செய்து சான்றிதழைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
`இத எதிர் பாக்கல' - தவெக மாநாட்டில் ஒட்டப்பட்ட QR code#TVKVijay | #TVK | #TVKMaanadu | | #ThanthiTV pic.twitter.com/MooihxYLx6
— Thanthi TV (@ThanthiTV) October 27, 2024