டொயோட்டா லேண்ட் குரூசர் 300

2 months ago 11

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், லேண்ட் குரூசர் 300 என்ற எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 3.3 லிட்டர் வி6 டர்போ டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 304 எச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம் பெற்றுள்ளது. இதில் இசட்எக்ஸ் மற்றும் ஜிஆர்-எஸ் என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன.

சன்ரூப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 12.3 அங்குல இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 14 ஸ்பீக்கர்கள் கொண்ட ஜெபிஎல் ஆடியோ சிஸ்டம், ஹில் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, டொயோட்டா சேஃப்டி சென்ஸ் 3.0 அடாஸ் பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலையாக, இசட்எக்ஸ் வேரியண்ட் சுமார் ரூ.2.31 கோடி, ஜிஆர்-எஸ் சுமார் ரூ.2.41 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post டொயோட்டா லேண்ட் குரூசர் 300 appeared first on Dinakaran.

Read Entire Article