தரங்கம்பாடி, பிப்.6: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் காலத்தில் கட்டப்பட்ட கவர்னர் மாளிகை மீண்டும் புதுபொலிவு பெறும் வகையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தரங்கம்பாடியில் உள்ள கவர்னர் மாளிகை டேனிஷ் காலத்தில் டேனிஷ் கவர்னர்கள் தங்குவதற்காக 1785 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உயரமான தூண்களும் தாழ்வார மையத்தில் பெரிய முற்றமும் அதன் இருபுறமும் பெரியகூடங்களும் அமைக்கபட்டுள்ளது. இதில் 1785 முதல் 1845 வரை டேனிஷ் ஆளுநர்கள் தங்கும் இடமாக இருந்தது. 1845 ல் ஆங்கிலேயர் வசம் இக்கட்டிடம் சென்றது. 1884 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் மற்றும் அமர்வு நீதிமன்றமும் இயங்கி வந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1947ல் இக்கட்டிடத்தில் உப்பு அலுவலகம் செயல்பட்டது.
இப்பொழுது கவர்னர் மாளிகை கட்டிடம் தமிழ்நாடு சுற்றுலாதுறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்தது. 2012ல் புதுப்பிக்கப்பட்டு புதிய பொலிவுடன் காணப்பட்டது. கவர்னர் மாளிகையை சுற்றுலாத்துறை எந்த பணிக்கும் பயன்படுத்தாமல் பூட்டியே வைத்திருந்தது. இதனால் மீண்டும் சீர்கெட்டு இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் 3 கோடியே 67 லட்சத்து 43 ஆயிரம் செலவில் டேனிஷ் கோட்டையை புதுப்பிக்கும் போது கவர்னர் மாளிகையும் புதுப்பிக்கபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கவர்னர் மாளிகையை புதுப்பிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
The post டேனிஷ் காலத்தில் கட்டப்பட்டது: தரங்கம்பாடியில் கவர்னர் மாளிகை சீரமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.