டைக்குவாண்டோ (TaeK won Do) என்பது கொரியாவில் அறிமுகமான ஒரு தற்காப்புக்கலை ஆகும். தென்கொரியாவில் இக்கலை ஒரு தேசிய விளையாட்டாகும். ஒலிம்பிக் போட்டிகளிலும் இது விளையாடப்படுகிறது. கொரியமொழியில் Tae என்பது உதை எனவும் Kwon என்பது கைகளால் தாக்குதல் எனவும் Do என்பது கலை எனவும் பொருள்படும். அதாவது, கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச்செய்யும் கலை எனப் பொதுவாகக் கூறலாம்.
இந்த தற்காப்புக் கலையில் மதுரையைச் சேர்ந்த சம்யுக்தா(7) உலக சாதனை படைப்பதற்கான முயற்சியியில் ஈடுபட்டதோடு உலகின் இளம்வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் போட்டியிலும் கலந்துகொண்டார். இந்த உலக சாதனை முயற்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த சாதனை படைக்க, அந்த நபர் அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகச் சரியாகச் செய்துகாட்ட வேண்டும் மற்றும் பிற மாணவர்களுக்கு குறைந்தது 50 மணிநேர டேக்வாண்டோ வகுப்புகளை எடுத்திருக்க வேண்டும்.
இதைப் பதிவு செய்து கின்னஸ் உலக சாதனை குழுவிற்கு அனுப்ப வேண்டும். இந்த பதிவு கொரியாவில் உள்ள உலக டேக்வாண்டோ தலைமையகத்தால் சரிபார்க்கப்படும். அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் மிகக் குறைந்த வயதில் கச்சிதமாகச் செய்து காட்டிய மாணவர் இந்த கின்னஸ் உலக சாதனைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த வகையில் சம்யுக்தா 270 நாட்களில் கேட்கப்பட்ட அனைத்து டேக்வாண்டோ பாடத்திட்டத்தையும் செய்து காட்டி இந்த சாதனைக்குத் தகுதி பெற்று கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தால் உலகின் இளம் வயது டேக்வாண்டோ பயிற்சியாளர் என்ற பட்டத்தைப் பெற்றார்.
The post டேக்வாண்டோவில் மதுரை சிறுமி சாதனை appeared first on Dinakaran.