டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன சாய் சுதர்சன்.. ஹர்திக் கொடுத்த ரியாக்சன்.. வைரல்

5 hours ago 2

லீட்ஸ்,

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் - கே.எல்.ராகுல் களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரரான சாய் சுதர்சன் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன 317-வது வீரர் சாய் சுதர்சன் ஆவார். அத்துடன் அவர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய உள்ளதாக கேப்டன் சுப்மன் கில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன சாய் சுதர்சனுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் இந்திய வீரரான ஹர்திக் பாண்ட்யா, " நீ இதற்கு தகுதியானவன், சாய். நன்றாக செல்" என்று வாழ்த்தி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது. 

Read Entire Article