டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பும்ரா

3 months ago 26

துபாய்,

வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது. இந்நிலையில், ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

இதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் (792 புள்ளி) 2 இடம் உயர்ந்து 3வது இடத்திற்கும், விராட் கோலி (724 புள்ளி) 6 இடம் உயர்ந்து 6வது இடத்திற்கும் வந்துள்ளனர். ரிஷப் பண்ட் (718 புள்ளி) 3 இடம் சரிந்து 9வது இடத்திற்கு வந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் ஜோ ரூட் (899 புள்ளி), நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் (829 புள்ளி) உள்ளனர்.

டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா (870 புள்ளி) 1 இடம் உயர்ந்து முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதே சமயம் முதல் இடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் (869 புள்ளி) 2வது இடத்திற்கு சரிந்துள்ளார். இந்தப்பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் (847 புள்ளி) 3வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (468 புள்ளி), ரவிச்சந்திரன் அஸ்வின் (358 புள்ளி) முதல் இரு இடங்களில் உள்ளனர். டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா (124 புள்ளி), இந்தியா (120 புள்ளி), இங்கிலாந்து (108 புள்ளி) அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன.


A new No.1 ranked bowler is crowned as India's Test stars rise the latest rankings https://t.co/6xcPtYGiFW

— ICC (@ICC) October 2, 2024

Read Entire Article