டெஸ்ட் கிரிக்கெட்; இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலியா...சாம்பியன்ஷிப் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

1 week ago 3

காலே,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 654 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 489 ரன்கள் பின்தங்கியதால் இலங்கை அணிக்கு ஆஸ்திரேலியா பாலோ ஆன் வழங்கியது.

இதனால் தொடர்ந்து தனது 2வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 2வது இன்னிங்சில் 247 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 242 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த ஆட்டம் முடிந்த பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தப்பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (69.44 சதவீதம்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா (65.74 சதவீதம்) 2வது இடத்திலும், இந்தியா (50.00 சதவீதம்) 3வது இடத்திலும், நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4வது இடத்திலும் உள்ளன. 5வது இடத்தில் இருந்த இலங்கை (41.67 சதவீதம்), ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியின் காரணமாக 6வது இடத்திற்கு சரிந்துள்ளது.

இதன் காரணமாக இங்கிலாந்து (43.18 சதவீதம்) 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (31.25 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (28.21 சதவீதம்), பாகிஸ்தான் (27.98 சதவீதம்) அணிகள் உள்ளன.

Read Entire Article