டெல்லியில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - வியாபாரி கைது

1 month ago 11

புதுடெல்லி,

டெல்லி போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கபீர் நகரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான கார் ஒன்று அந்த சாலையில் வந்துகொண்டிருந்தது. அதனை மடக்கிய போலீசார் அதில் சோதனை செய்தனர். அப்போது காரில் உள்ள கருப்பு பாலிதீன் பையில் இருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனை கடத்தி வந்த உஸ்மான்பூரைச் சேர்ந்த இம்ரான் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 10 குற்ற வழக்குகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article