டெல்லியில் நடந்த அகில இந்திய தடகள போட்டி வெற்றிபெற்ற மத்திய மண்டல போலீசாருக்கு ஐஜி பாராட்டு

2 months ago 11

 

திருச்சி, நவ.22: டெல்லியில் அகில இந்திய அளவில் நடந்த 73வது போலீஸ் துறையினருக்கான தடகள போட்டிகளில் வெற்றிபெற்ற மத்திய மண்டலத்தை சேர்ந்த போலீசாரை மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். டெல்லியில் நடந்த 73வது அகில இந்திய போலீஸ் துறையினருக்கான தடகள போட்டிகளில் மத்திய மண்டலத்தை சேர்ந்த திருச்சி மாவட்டம், லால்குடி போலீஸ் நிலைய போலீஸ் கான்ஸ்டபிள் சுந்தர், Triple Jump போட்டியில் கலந்து கொண்டு 7ம் இடத்தை பெற்றார். இவர் கடந்த 2018ம் ஆண்டில் வெள்ளிப் பதக்கமும், ₹3 லட்சம் ரொக்க பரிசும் வென்றவர். 2019ம் ஆண்டு வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் அரவிந்த், 110 மீட்டர் Hurdles போட்டியில் பங்கேற்று 5ம் இடம் பிடித்தார். அரியலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் கான்ஸ்டபிள் குழந்தைவேலு, குண்டு எறிதல் போட்டியில் 12வது இடமும், திருச்சி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் தர்ஷன், ஈட்டி எறிதல் போட்டியில் 17வது இடமும் பெற்றார். வெற்றி பெற்ற போலீசாரை திருச்சி மத்திய மண்டல போலீஸ் துறை ஐஜி கார்த்திகேயன் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

The post டெல்லியில் நடந்த அகில இந்திய தடகள போட்டி வெற்றிபெற்ற மத்திய மண்டல போலீசாருக்கு ஐஜி பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article