டெல்லியில் திடீர் நிலநடுக்கம்: குலுங்கிய வீடுகள், பொதுமக்கள் பீதி

2 months ago 8

புதுடெல்லி: டெல்லி மற்றும் நொய்டா, கிரேட்டர் நொய்டா காஜியாபாத் உள்ளிட்ட என்சிஆர் மாவட்டங்களில் நேற்று அதிகாலை 5:36 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 35 வினாடிகள் அது உணரப்பட்டது. தவுலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி மையம் இருந்தது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 பதிவானது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து அவசர அவசரமாக கீழே ஓடி வந்தனர். இதனால் சேதம் அல்லது உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நின்றதும், கட்டிடங்கள் நடுங்குவதும் போன்ற வீடியோ காட்சிகள் சமூக வளைத்தளங்களில் வைரலானது.

* அச்சப்பட தேவையில்லை
பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இதனால், மக்கள் அச்சப்பட தேவையில்லை. மேலும், அனைத்து பின்விளைவுகளுக்குத் தயாராக பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்,’என்றார்.

The post டெல்லியில் திடீர் நிலநடுக்கம்: குலுங்கிய வீடுகள், பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Read Entire Article