டெல்லியில் காற்று மாசு: 19 ஆயிரம் கிலோ பட்டாசுகள் பறிமுதல் - 79 வழக்குகள் பதிவு

2 months ago 14

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவி வருகிறது. காற்றின் தரம் நாளுக்கு நாள் தொடர்ந்து மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதன்படி டெல்லியில் பட்டாசு விற்பனை செய்யவோ அல்லது சேமித்து வைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 77 வருவாய்த்துறை குழுக்கள் மற்றும் 300 போலீஸ் குழுக்கள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் இதுவரை 19 ஆயிரத்து 5 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Read Entire Article