டெல்லியில் ஒரேநாளில் 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு

3 months ago 27

புதுடெல்லி: டெல்லியில் நேற்று ஒரே நாளில் கார் ஷோரூம், ஓட்டல் மற்றும் இனிப்பு கடை என மூன்று வெவ்வேறு இடங்களில் பெரிய தாதாக்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு காவல் துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

டெல்லியில் சிறிய, சிறிய சண்டைகளுக்கு கூட துப்பாக்கியால் சுடும் அளவுக்கு, துப்பாக்கி கலாசாரம் பெருகி விட்டது. பெரிய கடைகள் வைத்திருப்பவர்கள், தொழிலபதிர்களை மிரட்டி பணம் பறிப்பதற்காக, தாதா கும்பலை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்துகின்றனர்.

டெல்லியில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி பீதியை ஏற்படுத்தி உள்ளனர். மேற்கு டெல்லியில் நாராயண் விகாரில் உள்ள சொகுசு கார்களை விற்கும் ஷோரூம், மகிபால்பூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல், நாங்லோயில் உள்ள இனிப்பு கடையில் 3வது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

The post டெல்லியில் ஒரேநாளில் 3 இடங்களில் துப்பாக்கிச்சூடு appeared first on Dinakaran.

Read Entire Article