டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்- பட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த ஆலோசனை

11 hours ago 2

புதுடெல்லி:

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் அமர்வு நாளை (ஜனவரி 31-ந்தேதி) தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நாளை உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து, நாளை மறுநாள் (பிப்ரவரி 1) மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். விவாதத்திற்கு பின்னர் பிப்ரவரி 13-ந்தேதி கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவடைகிறது. 2-வது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகார துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. பட்ஜெட் தொடர்பாகவும், கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

நாடாளுமன்றம் சுமூகமாக செயல்பட எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் அனைத்து விவகாரங்கள் குறித்து எளிதாக விவாதிக்க முடியும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Read Entire Article