டெல்லியில் அடர்ந்த புகை மூட்டத்தால் மக்கள் அவதி

4 days ago 3

புதுடெல்லி,

டெல்லியில் 3வது நாளாக காற்றின் தரம் கடுமையான பிரிவில் பதிவானதால் அடர்ந்த புகை மூட்டம் நிலவியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் காற்று தரக் குறியீடு (AQI) 488 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'கடுமையான' பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று காலை புகை மண்டலம் போல காட்சியளித்தது.

டெல்லியில் உள்ள 32 கண்காணிப்பு நிலையங்களில், 31 நிலையங்களில் காற்றின் அளவுகள் 480ஐ தாண்டியுள்ளது. காற்று மாசு காரணமாக பொதுமக்கள் சுவாச பிரச்சினை, சரும நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இன்று காலை ஏற்பட்ட புகை மூட்டத்தால் பார்வைத்திறனை 400 மீட்டராகக் குறைத்தது, மேலும் அது பகலில் நீடிக்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்று மாசை குறைக்கும் வகையில் சாலையில் நீர் தெளிக்கப்பட்டு வருகிறது. காற்று தரக் குறியீடு என்பது காற்றின் தரத்தை குறிப்பதற்கு பயன்படும் ஒரு அளவு ஆகும். இந்த குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் காற்று நல்ல தரத்துடன் உள்ளது என்று பொருள். அதே போல் 51 முதல் 100 வரை இருந்தால் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் உள்ளது. 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான தரம், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமாக உள்ளது. 301 முதல் 400 வரை இருந்தால் மிக மோசமாக உள்ளது. 401 முதல் 450 வரை இருந்தால் கடுமையாக காற்று மாசடைந்து உள்ளது. 450 மேல் இருந்தால் கடுமையான பிரிவுக்கு மேல் காற்று மாசடைந்து உள்ளது என்று அறியப்படுகிறது.

Read Entire Article