டெல்லி முதல்-மந்திரி பங்களாவுக்குள் நுழைய முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் தடுத்து நிறுத்தம்

18 hours ago 2

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 150 நாட்கள் திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமீனில் விடுதலையான அரவிந்த் கெஜ்ரிவால், தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர், டெல்லியின் முதல்-மந்திரியாக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, முதல்-மந்திரியாக இருந்தபோது கெஜ்ரிவாலுக்கு அரசு ஒதுக்கிய பங்களா வீட்டை காலி செய்து புதிய வீட்டிற்கு குடியேறினார்.

அரசு பங்களாவில் கெஜ்ரிவால் தங்கியிருந்தபோது பங்களாவை சீரமைப்பதற்காக ஆடம்பரமான விலை உயர்ந்த பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், இதற்கு பொதுப்பணித்துறை உரியக் கணக்கு வழங்கப்படவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. பாஜகவின் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆம் ஆத்மி கட்சியினர் ஆய்வு செய்வார்கள் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால் பங்களாவிற்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், இன்று காலை அனுமதியை மீறி ஆம் ஆத்மி மந்திரி சவுரப் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியினர் பங்களாவிற்குள் நுழைய முயன்றனர். நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து மந்திரி சவுரப் பரத்வாஜ், எம்.பி. சஞ்சய் சிங் இருவரும் பங்களாவுக்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்டனர்.

Read Entire Article