டெல்லி: மருமகள், மகள் பாலியல் பலாத்காரம்; ஜாமீனில் வந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட முதியவர்

15 hours ago 3

புதுடெல்லி,

டெல்லியில் கோலே மார்க்கெட் பகுதியில் வசித்து வரும் 51 வயது முதியவர் ஒருவர், அவருடைய மருமகள் மற்றும் மகள் ஆகியோரை பல்வேறு தருணங்களில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுபற்றி பஹர்கஞ்ச் மற்றும் அலிப்பூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2018-ம் ஆண்டு முதன்முறையாக, மருமகள் அளித்த புகாரின் பேரில் பஹர்கஞ்ச் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது. கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எனினும், கோர்ட்டில் அவர் ஆஜராகவில்லை. இதனால், அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதன்பின்னர், 2022-ம் ஆண்டு ஆகஸ்டில் 14 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அலிப்பூர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்கு பதிவானது.

இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். எனினும், இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அவர், அதன்பின் சரணடையவில்லை. இதனால், 2-வது முறையாக கோர்ட்டு அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டது.

இந்நிலையில், டெல்லியின் கோலே மார்க்கெட் பகுதியில் அவர் வசித்து வருகிறார் என தலைமை காவலர் பிரதீப் தோமருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, போலீசார் சுற்றி வளைத்து அவரை பிடித்தனர். கல்வியறிவு இல்லாதவரான அந்நபர், கடந்த காலத்தில் குடும்பத்தினரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக தேடப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் இருந்து 1982-ம் ஆண்டு டெல்லிக்கு வந்து கூலி வேலை செய்து வந்துள்ளார் என தோமர் கூறினார். போலீஸ் காவலில் உள்ள அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article