டெல்லி மக்களுக்கு சேவை செய்ய பா.ஜ.க.வுக்கு தகுதியான வாய்ப்பு கிடைக்கவில்லை: ராஜ்நாத் சிங்

1 week ago 3

புதுடெல்லி,

டெல்லியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் முந்தைய அரசாங்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார்,

இதுதொடர்பாக ராஜேந்திர நகரில் நடந்த ஒரு பேரணியில் உரையாற்றிய அவர், "டெல்லி இந்தியாவின் இதயங்களில் ஒன்றாகும், ஆனால் டெல்லியின் மிகப்பெரிய முரண்பாடு என்னவென்றால், கடந்த 25 ஆண்டுகளாக, இங்கே இருந்தது காங்கிரஸ் அரசாங்கமோ அல்லது ஆம் ஆத்மி அரசாங்கமோ தான். டெல்லிக்கு சேவை செய்ய தகுதியான வாய்ப்பு பாஜகவுக்கு கிடைக்கவில்லை. நாம் 21 ஆம் நூற்றாண்டில் நுழைந்திருந்தாலும், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசாங்கங்களால் டெல்லி அதிக வளர்ச்சியைக் காணவில்லை,

பாஜகவின் அரசியல் ஒருபோதும் மக்களை ஏமாற்றுவது அல்ல. நான் ஏதாவது தவறாக சொன்னால் பத்திரிகையாளர்கள் அதை வெளியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அதை நான் ஏற்றுக்கொள்வேன். எங்கள் அரசியல் ஒருபோதும் மக்களை ஏமாற்றுவதாக இருந்ததில்லை என்பதால் இதை சொல்கிறேன்" என்று அவர் கூறினார். 

Read Entire Article