டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து ஆம் ஆத்மி போட்டியிட்டிருக்க வேண்டும்: அமர்தியா சென் கருத்து

3 months ago 8


சாந்திநிகேதன்: “டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து போட்டியிட்டிருக்க வேண்டும்” என நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்தியா சென் தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் பிர்பூர் மாவட்டத்தில் உள்ள தன் இல்லத்தில் அமர்தியா சென் அளித்த பேட்டியில், “இந்தியாவில் மதசார்பின்மையும், பன்முகத்தன்மையும் நிலைத்திருக்க ஒற்றுமை மிகவும் அவசியம். டெல்லி பேரவை தேர்தல் முடிவுகள் மிகைப்படுத்தப்படுவதை விட, முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.

ஆம் ஆத்மியின் உறுதிப்பாடுகள் என்ன? ஆம் ஆத்மி நிச்சயம் மத சார்பற்றது. அனைத்து இந்தியர்களுக்குமானது என்பதை தெளிவுப்படுத்துவதில் வெற்றி பெறவில்லை. அது இந்துத்துவாவை அதிகம் கடைப்பிடித்தது. பள்ளி கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களில் ஆம் ஆத்மி சிறப்பாக செயல்பட்டது. ஆனால் டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கைக்கோர்த்து செயல்பட்டிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருக்க முடியும்” என்று தெரிவித்தார்.

The post டெல்லி பேரவை தேர்தலில் காங்கிரசுடன் இணைந்து ஆம் ஆத்மி போட்டியிட்டிருக்க வேண்டும்: அமர்தியா சென் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article