டெல்லி, பெங்களூருவில் நிலத்தடி நீர் மட்டம் அபாய கட்டத்தில் உள்ளது-மத்திய அரசு

4 months ago 18

புதுடெல்லி,

நாட்டின் முக்கியமான நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பான கேள்விகளுக்கு மாநிலங்களவையில் மத்திய ஜல்சக்திதுறை இணை மந்திரி ராஜ் பூஷன் சவுத்ரி பதிலளித்தார். அப்போது அவர், டெல்லியில் நிலத்தடி நீர் மட்டம் சிக்கலான நிலையில் இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக டெல்லியின் நீர் உறிஞ்சும் விகிதம் 99 சதவீதமாக இருப்பதாக கூறினார்.

அதேநேரம் வசந்த் விகாரில் (153.13 சதவீதம்), மெராலியில் (117.9 சதவீதம்) இன்னும் மோசமான நிலை உள்ளதாகவும் அவர் கூறினார்.டெல்லியை ஒப்பிடும்போது பெங்களூரு மேலும் அபாய கட்டத்தில் இருப்பதாக கவலை தெரிவித்த அவர், அங்கு நிலத்தடி நீர் உறிஞ்சும் விகிதம் 150.84 சதவீதமாக இருப்பதாக தெரிவித்தார்.

அங்கு மிகவும் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக யெலகங்கா (225 சதவீதம்) இருப்பதாகவும், பெங்களூரு வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியகளும் 200 சதவீதத்துக்கு மேல் இருப்பதாகவும் ராஜ் பூஷன் சவுத்ரி கூறினார். தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அணு உலையில் இருந்து வெளியேறும் வெப்பத்தை பயன்படுத்தி கடல் நீரில் உப்பு நீக்கும் தொழில்நுட்பம் நாட்டின் பிற பகுதிகளுக்கு பரவலாக பொருந்தாது என்றும் தெரிவித்தார்.

Read Entire Article