புதிய கல்விக்கொள்கை பற்றி பலருக்கு புரிதல் இல்லை - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு

3 hours ago 2

வேலூர்,

வேலூரில் நடைபெற்ற தென் மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு பேசியதாவது;

"பிரிட்டிஷ் இந்தியா வந்த பிறகு நம்முடைய கல்வி முறையை மாற்றிவிட்டார்கள். அதை நாம் தற்போது மீட்டெடுக்க வேண்டும். அன்றைய காலத்தில் அரசர்கள் கல்வியில் தலையிடவில்லை. குருகுல கல்வியில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடினார்கள், புரிதல் இருந்தது. ஆசிரியர்களும் மாணவர்களும் அறிவை வளர்த்துக் கொண்டார்கள்.

இந்தியாவில் உள்ள பழைய கல்வி முறையில் மாற்றம் கொண்டு வருவது தான் புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக் கொள்கை பற்றி பலருக்கு விழிப்புணர்வும், பெரிதாக புரிதலும் இல்லை. மாநிலங்களில் கல்வி ஆரோக்கியமாக இல்லை. பிரதமர் மோடி கல்வியை பரவலாக்க விரும்புகிறார். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி படிப்பு தரமாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம்."

இவ்வாறு அவர் பேசினார்.  

Read Entire Article