
சென்னை,
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்து சிதறியது.
இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்பட 270 பேர் பலியாகினர். விமானத்தில் இருந்த ஒரே ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இந்த விபத்து காரணமாக விமானத்தில் செல்ல பலருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அகமதாபாத் விமான விபத்தால் பயணிகளின் வருகை குறைந்தது. இந்த நிலையில் டெல்லி- சென்னை வழித்தடத்தில் 2 ஏர் இந்தியா விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.