டெல்லி காற்று மாசு எதிரொலி; சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் காணொலியில் ஆஜராக அனுமதி

3 days ago 3

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதல் காற்று மாசு கடுமையாக அதிகரித்து, காற்றின் தரக்குறியீடு அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, டெல்லி காற்று தர மேலாண்மை ஆணையம் 4-ம் நிலை மாசு தடுப்பு கட்டுப்பாடுகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஆஜராகி, டெல்லியில் காற்று மாசு கட்டுப்படுத்த முடியாத அளவில் உள்ளதாகவும், எனவே காணொலியில் ஆஜராகி வாதிட வழக்கறிஞர்களுக்கு அனுமதிக்க அளிக்க வேண்டும் என்றும் முறையிட்டார்.

இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, காணொலியில் ஆஜராகி வாதிட வழக்கறிஞர்களை அனுமதிக்க நீதிபதிகளிடம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். எனினும், சுப்ரீம் கோர்ட்டு காணொலியில் மட்டுமே இயங்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க நீதிபதி மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article