டெல்லி கணேஷ் அமரராகி எல்லோரையும் அழவைத்து சென்றுவிட்டார் - நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்

6 months ago 17

சென்னை,

பிரபல தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் டெல்லி கணேஷ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், "டெல்லி கணேஷ் அண்ணா.....எனக்கு 18 அல்லது 20 வயதில் காத்தாடி அண்ணா நாடகக்குழுவில் எனது மூத்த சகோதரி நடித்தார். அப்போதுதான் முதன் முதலாக டெல்லி அண்ணாவை சந்தித்தேன். நான் நடிப்புத்துறைக்கு வந்த பிறகு எத்தனையோ படங்களில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றேன்! அவர் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது! எல்லோரையும் மகிழ்வித்து மகிழ்வார். அவரைச் சுற்றி நண்பர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பர். இப்போது அண்ணா அமரராகி எல்லோரையும் அழவைத்து சென்று விட்டார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. கலந்து கொள்ளக் கூடாத சூழ்நிலை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும். சென்று வாருங்கள் அண்ணா! எப்பிறப்பிலாவது மீண்டும் சந்திப்போம்! கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும்." எனக் கூறியிருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 8ம் தேதி சென்னையில் நடைபெற்றபோது, நடிகர் டெல்லி கணேஷ்க்கு 'கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டிருந்தது.

Read Entire Article