டெல்லி: ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர்

2 months ago 13

புதுடெல்லி,

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2025) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் கட்சியினர், கட்சி தாவும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

டெல்லி சட்டர்பூர் தொகுதி யா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.வான பிரம் சிங் தன்வார் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் இணைந்தார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், சட்டர்பூர் மற்றும் மெகருல்லி தொகுதிகளில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த பிரம் சிங் தன்வார் எங்கள் கட்சியில் இணைந்துள்ளார். இதன் மூலம் எங்களுக்கு கூடுதல் பலம் அதிகரித்துள்ளது என்றார்.

இதுபற்றி பிரம்சிங் தன்வார் கூறுகையில், கெஜ்ரிவாலின் அரசியல் நடை, செயல்பாடுகள் என்னை கவர்ந்துள்ளது. அதனால் நான் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்துள்ளேன். முழு ஈடுபாட்டுடன் மக்கள் பணியாற்றுவேன் என்றார்.

பிரம்சிங் தன்வார் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். வருகிற சட்டசபை தேர்தலை அவர் தலைமையில் சந்திக்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில் அவர் பா.ஜனதாவில் இருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தது, டெல்லி பா.ஜனதாவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article