டெம்போவில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல்

2 months ago 12

 

காரிமங்கலம், நவ.18: காரிமங்கலத்தில், தக்காளி லோடு ஏற்றிச்சென்ற டெம்போவில் கடத்திய 1 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி மகேஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், காரிமங்கலம் போலீசார், மாவட்ட எல்லையான கும்பாரஅள்ளி சோதனை சாவடியில், தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி, தக்காளி லோடு ஏற்றி சென்ற டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, தக்காளி வைக்கும் பிளாஸ்டிக் ட்ரேயின் முன்புறம் வைத்து பின்புறத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மறைத்து வைத்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து டெம்போவில் இருந்த 1 டன் எடையுள்ள சுமார் ₹5 லட்சம் மதிப்பிலான 50 மூட்டை குட்கா பொருட்கள், டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்திய டெம்போ டிரைவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மின்னம்பள்ளியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (37) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post டெம்போவில் கடத்திய 1 டன் குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article