தர்மபுரி, நவ.21:நல்லம்பள்ளி அருகே உள்ள கெங்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (54), ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று பாலக்கோடு பகுதியை சேர்ந்த நண்பர் அன்பழகன் என்பவருடன், டூவீலரில் மாரண்டஅள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். தர்மபுரி- ஓசூர் விரைவு தேசிய நெடுஞ்சாலை குலசனஅள்ளி பகுதியில், சாலையோரத்தில் டூவீலரை நிறுத்தியபோது, பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது.
இதில் ராஜா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனிருந்த அன்பழகன் படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, அன்பழகனை மீட்டு சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post டூவீலர் மீது கார் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி appeared first on Dinakaran.