டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் புதிய, மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்ஆர் 310 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதிலுள்ள 312.2 சிசி 4 ஸ்டிரோக், 4 வால்வ் இன்ஜின் அதிகபட்சமாக 9,800 ஆர்பிஎம்-ல் 38 பிஎஸ் பவரையம், 7,900 ஆர்பிஎம்-ல் 29 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த பிரிவு மோட்டார் சைக்கிளில் முதல் முறையாக சீக்வ்சியல் டிஎஸ்எல் மற்றும் கார்னரிங் டிராக் டார்க் கன்ட்ரோல் இடம் பெற்றுள்ளது.
புதிய வாகன உற்பத்தி விதிகளுக்கு ஏற்ப, வாகனத்தில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கக் கூடிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது. டிராக், ஸ்போர்ட், அர்பன் மற்றும் ரெயின் என நான்கு டிரைவிங் மோட்கள் உள்ளன. அதிகபட்சமாக மணிக்கு 215.9 கி.மீ வேகம் வரை செல்லும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ. 2,77,999. டாப் வேரியண்ட் ரூ. 2,99,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர் 310 appeared first on Dinakaran.