
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஜனகாம நகரில் 2 இளைஞர்கள் டிரைவிங் கற்றுக் கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிரைவர் இருக்கையில் இருந்த இளைஞர் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த குளத்தில் பாய்ந்தது.
இதையடுத்து சுதாரித்துக்கொண்ட இளைஞர்கள் காரின் ஜன்னல் வழியாக நீரில் குதித்தனர். அப்போது இதனை கவனித்த பொதுமக்கள் சிலர் குளத்தில் குதித்து அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து கிரேன் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.