மூணாறு, ஜூலை 1: ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த மங்கலத்து சாக்கோ (58) என்பவர் கடந்த 2016 அக்டோபர் 18ம் தேதி அடிமாலியிலிருந்து பூப்பாறை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து ராஜாக்காடு என்.ஆர்.சிட்டி பாரமடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து சாக்கோ தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தில் ராஜாக்காடு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பான வழக்கு நெடுங்கண்டம் கிராம நியாயாலய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் கோகுல் கிருஷ்ணன் ஆஜரானார்.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி அனூப் பி.ஆபிரஹாம் தீர்ப்பு வழங்கினார். அதில், பேருந்தின் கதவு பயணிகளுக்கு பாதுகாப்பற்ற வகையிலும் திறந்து இருந்ததே சாக்கோ இறப்பதற்கான காரணம் என்று நீதிமன்றம் கண்டறிந்தது. மேலும், டிரைவர் ஜிதின்(32), கண்டக்டர் மனு ஜோய் (26) ஆகியோருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.11,500 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.
The post டிரைவர், கண்டக்டருக்கு 6 மாதம் சிறை appeared first on Dinakaran.