டிராக்டருக்கான தவணைப் பணத்துடன் தலைமறைவான ஊழியர்… விவசாயி அளித்த புகாரில் ஜான் டீர் நிறுவன மேலாளர் மீது வழக்குப்பதிவு..

5 months ago 35
கள்ளக்குறிச்சியில் விவசாயியிடம் பண மோசடி செய்ததாக ஜான் டீர் டிராக்டர் நிறுவனத்தின் மேலாளர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முனியன் என்பவர், ஜான் டீர் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாயில் டிராக்டர் வாங்கியுள்ளார். தவணையை முறையாக செலுத்தி வந்த முனியன், உடல்நிலை சரியில்லாததால் 2 தவணைகளை செலுத்தவில்லை என்று கூறப்படும் நிலையில், டிராக்டரை ஜான் டீர் நிறுவனம் எடுத்துச் சென்றுள்ளது. முழு தொகையையும் செலுத்த வேண்டும் எனக் கூறியதால், பல இடங்களில் கடன் வாங்கி 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை நிறுவனத்துக்கு நேரில் சென்று கலக்சன் ஏஜண்ட் ரமேஷ் என்பவரிடம் கொடுத்தாகக் கூறுகிறார் முனியன். ஆனால் அந்தப் பணத்துடன் ரமேஷ் தலைமறைவாகி விட்டதாகவும் டிராக்டரைத் தர முடியாது என்றும் நிறுவனத்தின் மேலாளர் மணிகண்டன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 
Read Entire Article