டிராகன் படத்தின் 'வழித்துணையே' பாடலின் புரோமோ வெளியீடு

16 hours ago 2

சென்னை,

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு, கதாநாயகனாக நடித்து 'லவ் டுடே' படத்தை இயக்கினார். இப்படமும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்ததாக, 'ஓ மை கடவுளே' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார்.

இப்படத்தில் கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குநர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளதாக இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இப்படத்தின் முதல் பாடலான 'ரைஸ் ஆப் தி டிராகன்' சமீபத்தில் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் 2-வது பாடலான 'வழித்துணையே' என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Kathara kathara kathara Promo OUT NOW Second single 'Vazhithunaye' a beautiful romantic number from Jan 13th ♥️✨Second Single Promo ▶️ : https://t.co/jaZlRFtORK@pradeeponelife in & as #DragonA @Dir_Ashwath Araajagam A @leon_james Musical #PradeepAshwathCombopic.twitter.com/YbtnLx01JD

— AGS Entertainment (@Ags_production) January 8, 2025
Read Entire Article