'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்துடன் மோதும் சூரியின் 'மாமன்'

4 days ago 6

சென்னை,

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இந்த படத்தினை நடிகர் ஆர்யா தயாரித்துள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே மாதம் 16-ந் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது.

அதனை தொடர்ந்து, பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படமும் மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார். இது குடும்ப உறவுகள் அது தொடர்பான உணர்வுகளை மையமாகக் கொண்ட படம் என்று சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு படங்களும் திரையரங்குகளில் ஒரே தேதியில் வெளியாகி மோதிக்கொள்ள உள்ளதால், அவைகளுக்கிடையே மிகப்பெரிய போட்டி உருவாகப்போவது உறுதி. இதனால் இந்த 2 படங்களையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Read Entire Article