'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் முதல் நாள் வசூல்

2 hours ago 1

சென்னை,

கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' நேந்று திரையரங்குகளில் வெளியானது.

ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பேய் கதைக்கே உரிய இலக்கணத்தை முற்றிலும் மாற்றி, வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாளில் ரூ.3.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Read Entire Article