டிஜிபிகள் அபாஷ்குமார், அம்ரேஷ் புஜாரி பணி ஓய்வு: காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பிரிவு உபாசர விழா; டிஜிபி சங்கர் ஜிவால் நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு

3 days ago 1

சென்னை: தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக அபாஷ்குமார் பணியாற்றி வருகிறார். இவரது பணிக்காலம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. பீகார் மாநிலத்தை சேர்ந்த அபாஷ்குமார் பீகார் மாநிலத்தில் கடந்த 7.3.1965 ஆண்டு பிறந்தார். பிஏ முடித்த அவர், சிவில் சப்ளை தேர்வில் தமிழக கேடரில் கடந்த 1990ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பாக பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் டிஜிபியாக உள்ளார். இவருக்கு இந்தி, மராத்தி, ஆங்கிலம், தமிழ் என 4 மொழிகள் தெரியும்.

அதேபோல், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக அம்ரேஷ் புஜாரி பணியாற்றி வருகிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர், கடந்த 4.3.1965ம் ஆண்டு பிறந்தார். பிஎஸ்சி, எம்பிஏ பட்டப்படிப்பு முடிந்துள்ளார். மேலும், டிப்ளமோ சைபர் க்ரைம் மற்றும் தகவல் தொடர்பு செக்யூரிட்டி படிப்பும் முடித்துள்ளார். இவருக்கு ஒடியா, பஞ்சாபி, ஆங்கிலம், இந்தி, தமிழ் என 5 மொழிகள் தெரியும். தமிழக கேட்டரில் கடந்த 1991ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றியவர். சிறைத்துறை டிஜிபியாகவும் பணியாற்றினர். இவரது பணிக்காலம் இந்த மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

31ம் தேதி ரம்ஜான் பண்டிகை, 29 மற்றும் 30 ஆகிய தேதிகள் வார விடுமுறை என்பதால், பணி ஓய்வு பெறும் டிஜிபிக்கள் அபாஷ்குமார் மற்றும் அம்ரேஷ் புஜாரி ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று மாலை 4 மணிக்கு பிரிவு உபசார விழா நடந்தது. இந்த விழாவுக்கு வருகை தந்த டிஜிபிகள் அபாஷ்குமார் மறறம் அம்ரேஷ் புஜாரிக்கு சிவப்பு கம்பளம் விரித்து ேபன்டு வாத்தியங்களுடன் வரவேற்பு வழங்கப்பட்டது. பிறகு இருவரும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.

அதைதொடர்ந்து 34 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய டிஜிபிகளான அபாஷ்குமார் மற்றும் அம்ரேஷ் புஜாரிக்கு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அதேபோல் உயர் அதிகாரிகளும் இருவருக்கும் பூங்கொத்துக்கள் மற்றும் புத்தகங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஓய்வு பெற்ற டிஜிபிக்களின் குடும்பத்தினர் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழ்நாடு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண், ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

The post டிஜிபிகள் அபாஷ்குமார், அம்ரேஷ் புஜாரி பணி ஓய்வு: காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பிரிவு உபாசர விழா; டிஜிபி சங்கர் ஜிவால் நினைவு பரிசு வழங்கி கவுரவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article