பல்லடம்,மே8:கோவை வேளாண் பல்கலை மாணவர்கள் பல்லடத்தை அடுத்த, பருவாய் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அமுதா கூறுகையில்: பயிர் விதைப்பு மற்றும் பாசன உரங்களை மொபைல் செயலி மூலம் நேரடியாக பதிவு செய்து,ஒரே மாதிரியான பயிர் பதிவேட்டை உருவாக்குவதே தமிழக அரசின் நோக்கமாகும். மாணவர்கள் பயன்படுத்தும் இந்த செயலியில், தரவுகள் பதிவு செய்வதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த செயல்விதிகளை கற்றுக் கொள்ள முடியும்.இந்த முயற்சி கல்வியும் தொழில்நுட்பமும் ஒன்றிணைக்கும் சிறந்த முன்னோடியாக உள்ளது என்றார். முன்னதாக மாணவர்களின் டிஜிட்டல் முறையிலான பயிர் கணக்கீடு குறித்த செயல்பாடுகளை வேளாண் உதவி இயக்குனர் அமுதா ஆய்வு செய்தார்.
The post டிஜிட்டல் முறையிலான பயிர் கணக்கீடு appeared first on Dinakaran.