டிஎஸ்பி பெயரில் மசாஜ்சென்டரில் பணம் பறிக்க முயன்ற படை வீரர் கைது

4 months ago 15

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே கிருஷ்ணகிரி சாலையில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் உரிமையாளர் ஜான் மற்றும் ஊழியர்களிடம் ஒரு வாலிபர், ‘நான் டிஎஸ்பியின் டிரைவர், மசாஜ் சென்டரை தொடர்ந்து நடத்த ரூ.50 ஆயிரம் வாங்கி வரும்படி டிஎஸ்பி கூறினார்’ என தெரிவித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த ஜான் திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் திருப்பத்தூர் மாவட்டம், புதுப்பேட்டை அடுத்த கல்நார்சம்பட்டியை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் மயில்வாகனன்(30) என்றும், விடுமுறையில் ஊருக்கு வந்தவர் டிஎஸ்பி பெயரை பயன்படுத்தி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

The post டிஎஸ்பி பெயரில் மசாஜ்சென்டரில் பணம் பறிக்க முயன்ற படை வீரர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article