டிஆர்பிசிசிசி பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

4 months ago 29

 

திருவள்ளூர், அக். 7: டிஆர்பிசிசிசி பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. திருவள்ளூரில் உள்ள டிஆர்பிசிசிசி மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி.வி.ராமமோகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் வி.தரணி பாபு, எம்.ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாலச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார். மேலும், முகாமில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டி.ஜெகதீஷ்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நாட்டு நல பணி திட்ட மாணவர்களுக்கு ஆரோக்கியமாக வாழ்க்கை முறை அமைவதற்கான கருத்துரைகளை வழங்கினார்.

The post டிஆர்பிசிசிசி பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article