டர்பன்,
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியில் ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசாஹென்ரிக்ஸ் ஆகியோர் அணிவகுத்து நிற்கின்றனர். இதனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
மேலும் ஐ.பி.எல். ஏலம் வரவுள்ளதால் இந்த தொடரில் அசத்தும் வீரர்கள் கூடுதல் தொகைக்கு ஏலம் போல வாய்ப்புள்ளது. அந்த வகையிலும் வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.