டி20 கிரிக்கெட் - வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

3 hours ago 3

பிரிஸ்டல்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியது.

தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளநிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்திற்கான டாசை வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 49 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக லூக் வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 47 ரன் எடுத்தார்.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-வது ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை இங்கிலாந்து கைப்பற்றி உள்ளது. 3 வது டி 20 போட்டி 10-ம் தேதி நடைபெற உள்ளது.

Read Entire Article